காணிக்கைப்பாடல் | 641-பலிப்பொருள் தருவதன் |
பலிப்பொருள் தருவதன் பொருளுணர்ண்தேன் என்னைப் பலியெனத் தருகின்றேன் மனமுவந்து எடுத்தருள்வாய் இறைவா அருள் கொடுத்தருள்வாய் தலைவா 2 புதைந்திடும் விதை என்றும் இறப்பதில்லை மண்ணில் மடியவில்லை எனில் முளைப்பதில்லை பிறர்க்கென மடிவதில் தவறுமில்லை 2 வாழ்வில் இதைவிட சிறந்த பலியுமில்லை புதைந்திடும் விதையென வாழ்ந்திடுவேன் நீயொரு இதயத்தை எனக்குத்தந்தாய் அதில் நீதியும் அன்பையும் நீ நிறைத்தாய் பலன் தரும் யாவையும் கொடுக்கச் சொன்னாய் - 2 என்னைப் பயனுள்ள பலியாய் மாறிடச் சொன்னாய் பலன் தரும் பலியென வருகின்றேன் |