காணிக்கைப்பாடல் | 640-பரம்பொருளே எமைத்தரவே |
பரம்பொருளே எமைத்தரவே 2 பலிபீடம் நோக்கி வருகின்றோம் பலிப் பொருளாய் உன்னில் பலன் தரவே எம்மை பலியாக முழுதும் தந்தோம் - 2 மானிடர் எம் உழைப்பும் மண் தந்திடும் பலனும் மகிழ்வோடு உந்தன் மலர்ப்பாதம் வைத்தோம் - 2 எளியோரின் வாழ்வில் ஏற்றங்கள் கண்டு - 2 பலநூறு மடங்கு பலன் தரவே வந்தோம் இறைவார்த்தை எம்மில் நிறைவேறும் நாளில் இறையாட்சி மண்ணில் நிலையாட்சி ஆகும் - 2 பணிவோடு இணைந்து பணிகள் புரிந்து 2 பலநூறு மடங்கு பலன்தரவே வந்தோம் |