காணிக்கைப்பாடல் | 639-நீ தந்ததெல்லாம் உனக்குத் |
நீ தந்ததெல்லாம் உனக்குத் தருகின்றேன் இதில் புதுமை ஏதும் இல்லை நீ குடியிருக்க இதயம் தருகின்றேன் (2) வேறு சிறந்தது என்னில் இல்லை இறைவா என் காணிக்கை ஏற்றிடுவாய் நிறைவாய் என் வாழ்வை மாற்றிட வா (2) விடியும் பொழுது தோன்றும் விடிவெள்ளி அது விடியலின் காணிக்கையே (2) காலைக் கதிரவனின் மின்னும் பனித்துளிகள் - (2) புது நாள் உனக்குத் தரும் காணிக்கையே நீல வானங்களே அதில் நீந்தும் மேகங்களே - (2) என் சின்ன இதயத்தையே அவர் பாதம் சேர்த்திடுங்கள் (2) மாலைத் தென்றல் கொணரும் மலர் மணம் மாலை நேரத்தின் காணிக்கையே (2) வெள்ளிநிலவுடன் ஒளிரும் விண்மீன்கள் - (2) இரவுப் பொழுது வரும் காணிக்கையே பாடிடும் பறவையே துள்ளி ஓடிடும் அருவியே - (2) என் சின்ன இதயத்தையே அவர் பாதம் சேர்த்திடுங்கள் (2) |