காணிக்கைப்பாடல் | 636-நாங்கள் தருகின்ற |
நாங்கள் தருகின்ற காணிக்கை - இதை ஏற்றருள் தெய்வமே - 2 நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்திருந்தோம் - 2 கண்ணீர்ப் பூக்களை உந்தன் பாதத்தில் காணிக்கையாக்கவே - இன்று உம்மை நாடினோம் வளமற்ற வாழ்வில் வசந்தத்தைத் தேடி பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் - 2 அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை காணிக்கையாக்கவே - இன்று உம்மை நாடினோம் |