Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  633-திருவே திருப்பலி  


திருவே திருப்பலி பொருள்தனையே
உம் திருக்கழல் வணங்கி தருகின்றோம்
திருக்கழல் வணங்கி தருகின்றோம்

ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை
உணர்ந்திடப் புகுந்தோம் அன்பாக
புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில்
புனிதனை படைத்தோம் பலியாக

ஏழையர் வழங்கும் உள்ளமெனும் தீபம்
எரிந்திட உன்னருள் கனல் வேண்டும்
உலகின்மாயை விடுபட என்றும்
உன்னிடம் சரணம் பெறவேண்டும்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்