Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  632-திருமுன் வந்தோம்  


திருமுன் வந்தோம் திருப்பலிப் பொருளுடன்
அருளுடன் ஏற்பாய் திருவே - 2

தளிர் பதம் வைத்தே படைத்தோம் பொருளை
ஒளிர் கரம் கொண்டே ஆசீர் வதித்தே
களிப்புடன் எம்மையும் ஒன்றாக இணைத்து ஆ... ஆ...
களிப்புடன் எம்மையும் ஒன்றாக இணைத்து
அளித்தோம் பலியாய் இறைவா ஏற்பாய் - இறைவா ஏற்பாய்

அளிக்கும் பொருளோ அருகதை உண்டோ
அளிப்பவர் தாமோ தகுதியும் உண்டோ
இருப்பினும் பொருளை எம்மோடு கொணர்ந்து ஆ... ஆ...
இருப்பினும் பொருளை எம்மோடு கொணர்ந்து
விரும்பி இறைவா ஏற்றிடு என்றோம் - ஏற்றிடு என்றோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்