காணிக்கைப்பாடல் | 595- |
தலைவா என் தலைவா என் இதயத்தின் எழில் இராகங்கள் தருகின்றேன் நான் உந்தன் மலர்ப்பாதங்கள் ஏழை என் வாழ்வினிலே எல்லாமும் நீ யேசு நீ இல்லாமல் என் வாழ்வு வீண் உன்பீட மலராக எனை ஏற்றுக் கொண்டாய் ஆ..ஆ..ஆ..ஆ உன்பீட மலராக எனை ஏற்றுக் கொண்டாய் என்பாதைக் கொளியாகி வழிகாட்டுகின்றாய் என்னையே முழுவதும் உன்னிடம் இன்று அர்ப்பணம் ஆக்கிறேன் உன்னையே முழுவதும் உலகினில் காண அர்ச்சனை ஆக்கினேன் அர்ச்சனை ஆக்கினேன் நானோ உன் கரம் தீண்டும் நாள் பார்க்கின்றேன் யாழாய் உன் சுரம் பாட வரம் கேட்கின்றேன் நாதா உன் அருள் வேண்டி கரம் ஏந்தி வந்தேன் ஆ...ஆ ஆ ஆ நாதா உன் அருள் வேண்டி கரம் ஏந்தி வந்தேன் நாதா உன் புகழ்பாடி எனை இன்று தந்தேன் என்னையே முழுவதும் உன்னிடம் இன்று அர்ப்பணம் ஆக்கிறேன் உன்னையே முழுவதும் உலகினில் காண அர்ச்சனை ஆக்கினேன் அர்ச்சனை ஆக்கினேன் |