காணிக்கைப்பாடல் | 627-தந்தேன் என் இறைவா |
தந்தேன் என் இறைவா - உன் தாளினைப் பணிந்து தந்தேன் - என் வாழ்வை முழுதும் உன்னிடம் தந்தேன் ஏற்றருள்வாய் என் இறைவா ஏற்றருள்வாய் உலகினை எனக்களித்தாய் - அதில் உயர்வான பொருளையும் சேர்ந்தளித்தாய் மனதினை உனக்களித்தேன் - இம் மண்ணிலே மகிழந்திட்ட மனமளித்தேன் புனிதமாக்கும் என் மனதை புனிதமாக்கும் புனிதமாக்கும் வலிமையை எனக்களித்தாய் - உடன் வளம் சேர் அறிவையும் சேர்ந்தளித்தாய் வலிமையைப் பயன்படுத்தி - நான் நலமோடு நலிவும் அனுபவித்தேன் புனிதமாக்கும் என் உழைப்பை புனிதமாக்கும் புனிதமாக்கும் |