காணிக்கைப்பாடல் | 626-தந்தையே உமக்கு |
தந்தையே உமக்கு காணிக்கையாகத் தந்தேன் என்னையே ஏற்றருள்வீர் என்னை ஏற்றருள்வீர் புவியினில் புதுமைகளும் புத்தொளியில் பொழுதுகளும் தாலந்து கொடைகளும் நீர் தந்தீர் தலைவன் இயேசுவின் வழிதனிலே திருச்சபை வளம்பெற வாழ்ந்திடவே ஏழைகள் நலமே பேணிடவே - எந்தன் வாழ்வெல்லாம் தருகின்றேன் தந்தையே உனக்கென தந்ததனால் எல்லாம் நான் அடைந்துவிட்டேன் எனக்கென்று குறை ஏது உண்டு எனக்கென நான் இனி வாழாமல் இயேசுவுக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் இறையாட்சி மலர அருளாட்சி நிறைய வாழ்வெல்லாம் தருகின்றேன் தந்தையே |