Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  624-தந்திட்ட பொருட்கள்  


தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்

வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா - வெறும்
விழி நீர் வியர்வை வேதனை அன்றி
வேறெதும் இல்லா நிலை இறைவா

உனக்கென என்னை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய்க் கேட்கின்றோம் - எங்கள்
மனம் பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர்தம்
மனத்துயர் நீங்க படைக்கின்றோம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்