காணிக்கைப்பாடல் | 623-தன்னலம் மறந்து தரவந்தேன் |
தன்னலம் மறந்து தரவந்தேன் தயவாய் நீயும் ஏற்றிடுவாய் (2) உள்ளதெல்லாம் நான் கொடுத்திடுவேன் உவப்புடன் ஏற்று உமதாக்கும் உம்மில் நான் என்றும் வாழ உயர்ந்தது எல்லாம் தருவேன் (2) உமது உடலை எனக்குத் தந்தாய் உயர்வாய் நாளும் வாழ வைத்தாய் (2) உம் சாயலாய் நானும் மாறிடவே உம் பணியினை நாளும் தொடர்ந்திடவே (2) என்னைத் தருகின்றேன் நீர் ஏற்று வரமருளும் - 2 வாழ்வில் வளமை எனக்குத் தந்தாய் பகிர்ந்து நாளும் வாழச் சொன்னாய் (2) உம்மைப் போலவே நானும் பகிர்ந்திடவே உம் சாட்சியாய் நாளும் வாழ்;ந்திடவே (2) என்னைத் தருகின்றேன் நீர் ஏற்று வரமருளும் - 2 |