காணிக்கைப்பாடல் | 622-சொல்லால் எல்லாம் செய்தவனே |
சொல்லால் எல்லாம் செய்தவனே எல்லாம் தந்தோமே வாழ்வால் எல்லாம் சொன்னவனே தாழ்வாய் தந்தோமே போற்றுவோம் இறைவா வாழ்த்துவோம் தலைவா (2); பல்வகைப் பொருளும் பண்பட்ட உள்ளமும் நன்றியாய்க் கொண்டு வந்தோம் எம் நிறை வாழ்வும் அது தரும் பலனும் மகிழ்வாயும் பாதம் தந்தோம் உழைப்பும் களைப்பும் கொண்டோமே உவகை இன்பம் தந்தோமே ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் மலர வைப்பாய் கனி கொடுப்பாய் முந்நாள் வேதனை பின்நாள் சோதனை இந்நாள் கொண்டு வந்தோம் உன்நாள் சாதனை உன்மொழி போதனை பொன்னும் பாதம் வைத்தோம் கலக்கம் தயக்கம் கொண்டோமே களிப்பு செழிப்பு தந்தோமே ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் மலர வைப்பாய் கனி கொடுப்பாய் செய்வினை பாவங்கள் சொல்வினை காயங்கள் சேர்ந்து கொண்டு வந்தோம் காய்ந்திட்ட உள்ளங்கள் தேய்ந்திட்ட உறவுகள் கனிவாயுன் பாதம் வைத்தோம் தாழ்வும் உயர்வும் கண்டோமே தலைவன் உன் கரம் தந்தோமே ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் மலர வைப்பாய் கனி கொடுப்பாய் |