காணிக்கைப்பாடல் | 619-காணிக்கைப் பொருட்களையே |
காணிக்கைப் பொருட்களையே கரங்களில் ஏந்தியே தந்திட வருகின்றோம் இறைவா ஏற்பாயே மண்ணில் மடியும் கோதுமையாய் மனிதன் வாழ உயிர் தந்தாய் (2) மாண்புடன் வாழ்ந்திடவே மனங்களைத் தருகின்றோம் பரிவுடன் ஏற்றிடுவாய் பலிப்பொருளாய் மாற்றிடுவாய் (2) அன்றொரு நாள் அன்னையவள் மகனை எமக்காய் பலி கொடுத்தாள் (2) இன்று உம் ஆலயத்தில் இதயத்தைத் தருகின்றோம் பரிவுடன் ஏற்றிடுவாய் பலிப்பொருளாய் மாற்றிடுவாய் (2) |