காணிக்கைப்பாடல் | 618-காணிக்கை மலர்கள் |
காணிக்கை மலர்கள் கொண்டு வந்தேன் கனிவாய் ஏற்றிடுவாய் கறையுள்ள இதயங்கள் அர்ப்பணிதேன் காயங்கள் ஆற்றிடுவாய் உடலும் குருதியும் பலியில் மலரும் உன்னத நிகழ்வாய் மாற்றிடுவாய் அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் மனிதம் கலந்திடும் பலியினை (2) தெய்வ நிலையாய் மாற்றிடுமே (2) பசித்தோர் நலிந்தோர் உயர்ந்திடவே என்னுடல் உழைப்பினைத் தர வந்தேன் வாழ்வினை இழந்தோர் வளம் பெறவே குருதி சிந்தும் அன்பைத் தந்தேன் வறுமை சிலுவை அழுத்தும்போது தாங்கும் மனிதராய் மாறவந்தேன் தாழ்ந்த இதயங்கள் தந்து நின்றேன் நீதி மறுக்கும் மனிதரிலே நேர்மை இதயத்தை விதைக்கவே வீதி வாடும் உள்ளத்திலே மனித நேயம் பரப்பவே உறவாய் பரிவாய் நானும் மாற உடைந்த உள்ளத்தைத் தர வந்தேன் என்னையே காணிக்கையாய் தந்து நின்றேன் |