Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  617-காணிக்கை நேரமிது  


காணிக்கை நேரமிது
கரங்களில் ஏந்தி வந்தோம்
கருணையின் தேவனே
இதை கனிந்து ஏற்றிடுவாய்

பொன்னில்லை பொருளில்லை
என்னிடம் ஒன்றுமில்லை - 2
நீ தந்த வாழ்வுதனை - 2
தருகிறேன் ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இருகரம் கொண்டு ஏற்றிடுவாய்

வாழ்வு ஒன்று கேட்டு வந்தேன்
நல்வாழ்வினை எனக்களித்தாய் - 2
நீ தந்த வாழ்வுதனை - 2
தருகிறேன் ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இருகரம் கொண்டு ஏற்றிடுவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்