Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  615-காணிக்கை தரும் நேரம்  


காணிக்கை தரும் நேரம் நான்
என் மனம் தருகின்றேன் - 2
ஏற்றருள் தெய்வமே
எளியவன் தருகின்ற காணிக்கையை - 2

படைப்புகள் பலவாகினும்
பரமன் உமக்கே சொந்தம் - 2 - அதில்
மலராகும் என் மனம் உன்னிடத்திலே - 2
மணம் காண ஏற்றிடுமே - 2

பிறரன்புப் பணிகளெல்லாம்
தலைவன் உமதன்றோ - 2 - என்றும்
உமதன்புப் பணியில் என் வாழ்வினை - 2
பலியாக ஏற்றிடுமே 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்