காணிக்கைப்பாடல் | 514-காணிக்கை தர வந்தோம் |
காணிக்கை தர வந்தோம் -- உம் மலரடி பாதங்கள் வணங்க வந்தோம் (2) வரங்களைப் பொழியும் நாயகனே எம் கரங்களைக் குவித்து வணங்கி வந்தோம் உம் மலரடி பணிந்து வாழ்வினைத் தருவோம் -- (காணிக்கை) இயற்கையின் எழிலினிலே உனக்கு எம் சந்தண மலர்களை எடுத்து வந்தோம் தீபங்கள் ஏந்தி திருமுன் ஏற்ற ஓடி வருகின்றோம் (music) உனக்கென ஆயிரம் கீதங்கள் பாடி எம்மையே தருகின்றோம் - நாம் -- (காணிக்கை) கோதுமை கதிர்மணி போல் இணைந்து எம் வாழ்வினைக் காணிக்கையாக்க வந்தோம் நாவினால் உந்தன் புகழினைப் பாட பேதை வருகின்றோம் (music) வாழ்வினில் ஆயிரம் சேவைகள் ஆற்ற எம்மையே தருகின்றோம் - நாம் -- (காணிக்கை) |