Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  613-காணிக்கை தர நான்  


காணிக்கை தர நான் வருகின்றேன்
கனிவுடன் என்னையும் ஏற்றிடுவாய் (2)
இறைவா இறைவா ஏற்றிடுவாய் - 2
பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய்

உள்ளதெல்லாம் தரவந்தோம்
உவப்புடன் ஏற்றிடுவாய்
உணர்வையெல்லாம் உடமையெல்லாம்
உம் பலிப்பொருளாய் ஆக்கிடுவாய் (2)
இறைவா இறைவா ஏற்றிடுவாய் - 2
பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய்

உழைப்பையெல்லாம் உயர்வையெல்லாம்
உணர்ந்து தருகின்றோம்
உலகையெல்லாம் உறவையெல்லாம்
உருவாக்க வேண்டி படைக்கின்றோம் (2)
இறைவா இறைவா ஏற்றிடுவாய் - 2
பலிப்பொருளாய் எனை மாற்றிடுவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்