காணிக்கைப்பாடல் | 610-காணிக்கை தந்தேனே இறைவா |
காணிக்கை தந்தேனே இறைவா என்றும் கனிவுடன் ஏற்பாய் நிறைவாய் ஏழை என் வாழ்வை தலைவா நீர் ஏற்றிடுவாய் என்றும் கனிவாய் பாவங்கள் நிறைந்த உள்ளமதை உன் காலடி பணிந்து தொழுது நின்றேன் பெருகிடும் கண்ணீர்த் துளிகளுடன் - என் நொறுங்கிய உள்ளம் ஏற்றிடுவாய் உடல் பொருள் யாவையும் நீ தந்தாய் - உன் உயிரையும் எனக்காய் நீ தந்தாய் உன் அன்பிற்கு இணையாய் எதைத் தருவேன் என் பலிப்பொருளாய் நீ ஏற்றிடுவாய் |