Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  609-காணிக்கை தந்தேன் கனிவுடன்  

காணிக்கை தந்தேன் கனிவுடன் ஏற்பாய்
இறைவா என்னையும் ஏற்றிடுவாய் (2)
ஏற்பாய் இறைவா இறைவா ஏற்பாய் (2)

உழைப்பின் பயனை உம்மிடம் தந்தேன்
ஏற்பாய் நீ என் இறைவா (2)
பணிகளில் வருகின்ற தடைகளையும் - 2
பலியென ஏற்பாய் என் இறைவா

சிந்தனை சொல் செயல் நலன்களும் தந்தேன்
ஏற்பாய் நீ என் தலைவா (2)
உடல் பொருள் ஆவி அனைத்தையுமே - 2
உன் பதம் ஏற்பாய் என் இறைவா




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்