காணிக்கைப்பாடல் | 608-காணிக்கை காணிக்கை |
காணிக்கை காணிக்கை காணிக்கையாக வருகின்றோம் ஏற்றிடுவாய் மாற்றிடுவாய் எம்மையும் பலியினில் சேர்த்திடுவாய் (2) கோதுமை மணியும் திராட்சை ரசமும் உம்மிடம் கொண்டு வந்தோம் நேரிய உழைப்பும் உழைப்பின் பலனும் உமக்கே கையளித்தோம் (2) இன்றைய பொழுதில் செய்பவை அனைத்தும் உம்மிடம் படைக்க வந்தோம் எம் செயலனைத்தும் உம் செயலாக மாற்றிட கூடி வந்தோம் பகைமை நீங்கி அநீதி அழிய அன்பும் நீதியும் மலரும் பதுக்கலும் பதவியும் பகிர்வாய் மாற திருப்பலி வாழ்வாகும் (2) ஒருமனதாக உம்மிடம் கூடி வழிபட வந்துள்ளோம் உம் வழியினிலே உலகினில் வாழ எம்மையே படைத்துவிட்டோம் |