காணிக்கைப்பாடல் | 607-காணிக்கைக் கரம் ஏந்தி |
காணிக்கைக் கரம் ஏந்தி நான் வரும் நேரம் காலத்தின் தலைவா நீர் கரம் நீட்டவேண்டும் காரணத்தோடு எனைப் படைத்தவரே காணிக்கையாய் என்னை ஏற்றுக்கொள்வீரே உள்ளத்தை உமக்கே தர வந்தேன் உகந்தது அதுவே என நினைத்தேன் (2) உலகத்தை அன்பால் ஈர்த்தவரே (2) உனக்கென எனை நான் தருகின்றேன் என்னகம் படைத்து எனைக் காத்தீர் என்ன நான் தருவேன் உமக்கெனவே (2) எனக்கென்று ஓன்றில்லை இவ்வுலகில் (2) என்னையே அளிக்கின்றேன் உவப்புடனே |