காணிக்கைப்பாடல் | 604-கரம் விரித்துக் காணிக்கை |
கரம் விரித்துக் காணிக்கை எடுத்து வரம் கேட்டு அப்பம் கொடுத்து ரசம் அளித்து பாவம் தடுத்து சிரம் பணிந்தோம் மலர்கள் தொடுத்து அப்படியே ஆகட்டும் - 2 நிலம் அளித்த பலனை ஏற்று நலம் யாம் பெற எமைக்கண்ணுற்று குலம் தழைக்க நித்திய பேற்று பலம் அளிப்பாய் உணவாய் ஏற்று அப்படியே ஆகட்டும் - 2 விளங்கச் செய்யும் அன்பில் அக்களித்த உள்ளங்கள் மகிழ்ந்து ஒன்றாய்ப் பழுத்த பழங்கள் யாவும் பானமாய் அளித்த களங்கமில் ரசம் தந்தோம் வழுத்த அப்படியே ஆகட்டும் - 2 |