காணிக்கைப்பாடல் | 603-கல்மனம் கரைய கண்களும் |
கல்மனம் கரைய கண்களும் பனிக்க கைகளைக் குவித்தேன் இறைவா என் மனம் வருவாய் இறைவா என்னகம் புகுந்து இதயத்தில் அமர்ந்து பொன்னகம் புனைவாய் இறைவா - 2 - அங்கு புன்மைகள் மறைந்து நன்மைகள் நிறைய இன்னருள் தருவாய் இறைவா 2 இறைவா இறைவா இறைவா இறைவா பாசத்தை வளர்த்து பாவத்தை விலக்க பாதத்தைப் பிடித்தேன் இறiவா - 2 - துயர் வீசிடும் புயலும் வெகுண்டெழும் அலையும் அமைந்திடப் பணிப்பாய் இறைவா -2 இறைவா இறைவா இறைவா இறைவா நான் என்னும் அகந்தை நரகத்தை அழித்து நல்லுலகமைப்போம் இறைவா - 2 - அங்கு பூவெனும் இதயப் பீடத்தில் எனையே பலியாய் அளிப்பேன் இறைவா - 2 இறைவா இறைவா இறைவா இறைவா |