Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  595-  



ஏற்றுக்கொள்வீரே - தேவா ஏற்றுக்கொள்வீரே
வேதாகமம் போற்றும் தேவா எம் காணிக்கை
ஏற்றுக்கொள்வீரே - தேவா ஏற்றுக்கொள்வீரே

மன்னா பொழிந்தவரே - கல்லில்
தண்ணீர் சொரிந்தவரே (2)
எந்நாளும் அப்பமும் - இரசமும் தருகின்றோம்
ஏற்றுக்கொள்வீரே - தேவா ஏற்றுக்கொள்வீரே (2)

எந்தையர் ஆபிரகாம் - ஆபேல்
தந்த நற் கனிப்பொருளாய் (2)
மைந்தரெம் உடல் பொருள் - ஆவி உம் காணிக்கை
ஏற்றுக்கொள்வீரே - தேவா ஏற்றுக்கொள்வீரே (2)

முன்னைய புதுமையிலே தண்ணீர்
பழ ரசமானது போல்; (2)
என்றும் உம் தேகமும் - இரத்தமும் ஆகிட
ஏற்றுக்கொள்வீரே - தேவா ஏற்றுக்கொள்வீரே (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்