காணிக்கைப்பாடல் | 600-ஏற்றருள்வீர் இறைவா |
ஏற்றருள்வீர் இறைவா ஏழை நான் அளித்திடும் காணிக்கையை இன்று ஏற்றருள்வீர் - இறைவா - 2 உழைத்த பலனில் கிடைத்த பொருளை உம் பதம் இறைவா எடுத்து வந்தேன் (2) அழைத்து என்னை அப்பமாய் இரசமாய் - 2 அருள் நிறை இறைவா ஏற்றருள்வீர் - 2 வாழ்க்கையின் இன்பம் துன்பங்களை - நான் வைக்கின்றேன் உம் திரு முன்னே (2) ஏழ்மையில் வாடிடும் உள்ளத்தினை - 2 இறைவா உவந்து ஏற்றருள்வீர் - 2 |