காணிக்கைப்பாடல் | 599-ஏழை எனது காணிக்கை |
ஏழை எனது காணிக்கை எதுவும் இங்கில்லை என் இதயம் தான் காணிக்கை ஏற்றுக்கொள்ளும் தேவனே (2) ஏழை எனது காணிக்கை சிந்தனை சொல்லும் செயலும் எல்லாம் இறைவா உமக்கே தருகின்றேன் (2) புனிதமாக்கி பயனுமாக்கி நிறைவு காணவிழைகின்றேன் தந்தாய் தயவாய் ஏற்றிடுவாய் தாழ்ந்து பணிந்து தருகின்றேன் (2) வாழ்வை உம்மில் தேடுகிறேன் வரங்கள் வேண்டி பாடுகிறேன் (2) அன்பில் வாழும் மனிதமாக எந்தன் இதயம் தருகிறேன் தந்தாய் உம்மில் ஏற்றிடுவாய் தந்திடும் எம்முள்ளம் தேற்றிடுவாய் (2) வாடிடும் நெஞசம் மகிழ்ந்திடவே வாழ்வு உம்மில் மலர்ந்திடவே (2) உம் திரு தியாக பலியில் இணைந்து உம்மையே காண விழைகின்றேன் எம்மை ஏற்றிடுவாய் உம்மைப்போல் எம்மை மாற்றிடுவாய் (2) |