காணிக்கைப்பாடல் | 597-ஏழை என்னைக் காணிக்கையாக |
ஏழை என்னைக் காணிக்கையாகத் தருகின்றேன் தெய்வமே ஏற்றுக்கொள்ளுமே, ஏற்றுக்கொள்ளுமே - 2 என்னுயிரும் உடலும் உள்ளமும் சிந்தனையும் செயலும் - என் உணர்வுகள் உறவுகள் என்னில் உள்ள திறமைகள் - 2 யாவும் உந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள் - (ஏழை) என் கடந்தகால வாழ்க்கையும் நிகழும் வாழ்க்கையும் - நான் எதிர்கொள்ளும் வாழ்க்கையும் அதன் வளர்ச்சி தளர்ச்சியும் - 2 யாவுமுந்தன் கருணையின் கொடைகள் தந்தாய் ஏற்றுக்கொள் - (ஏழை) |