Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  596-ஏழை எந்தன் உள்ளத்தை  


ஏழை எந்தன் உள்ளத்தை
ஏந்தித் தட்டில் தாங்கியே
வாழ்வும் செயலும் சிந்தனையும்
வாஞ்சையோடு அளிக்கின்றேன்
ஏற்றருள்வீர் எம் பிதாவே - 2

நீளக் கிண்ண இரசமதிலே
நீர்த்துளி போலே கலந்தே
நேச இயேசுவின் பாசத்திலே
நிரந்தரமாய் நான் நிலைத்திடவே
ஆசைக் கொண்டேன் அருள்புரிவீர் - 2

இன்றும் என்றும் உம்மிடமே
இயேசுவே நான் வாழ்ந்திடவே
இனிமேல் வாழ்வது நானல்ல
இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்
என்ற வரத்தை எனக்களிப்பீர் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்