Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  594-ஏங்கி வருகின்றோம் இறைவா  

ஏங்கி வருகின்றோம் இறைவா
உருகி உம்மிடம் கேட்கின்றோம்
எம்மை முழுவதும் தருகின்றோம்
ஏற்று அருள் பொழிவாய்

அப்பமும் இரசமும் கொண்டு வந்தோம்
அன்புடன் எம்மையும் இணைக்கின்றோம் - 2
இன்னுயிர் வாழ உன்னுயிர் தந்தாய்
உன் பாதம் நாளும் பணிகின்றோம் - 2
வாரி வழங்கும் வள்ளலே உன்
வரங்கள் தந்து வாழவைப்பாய்
ஏற்று அருள் பொழிவாய்

இன்பமும் துன்பமும் நிறைந்;த வாழ்வை
உம்முடன் பலியாய் தருகின்றோம் - 2
வறுமை நீங்க வளமை நிறைய
பகிரும் மனதைத் தாருமே - 2
வாரி வழங்கும் வள்ளலே உன்
வரங்கள் தந்து வாழவைப்பாய்
ஏற்று அருள் பொழிவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்