Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  593-எனக்கென உள்ளதெல்லாம்  
எனக்கென உள்ளதெல்லாம் இறைவா
உனக்கென நான் தர எடுத்து வந்தேன் (2)
அருளின் ஊற்றே அருங்கொடை வள்ளலே - 2
அளித்திடும் அனைத்தையும் ஏற்றிடுவாய்

நாளெல்லாம் நான் உழைத்து வந்தேன் - என்
உழைப்பின் பலனை உன்னிடம் தரவந்தேன்
உலகில் நான் தினம் புகழ் அடைந்தேன் - அந்த
புகழினை உன் பதம் சமர்ப்பிப்பேன்
அன்பாய் எனைக் காக்கும் என் இறைவா
ஆபேலின் காணிக்கையாய் ஏற்றிடுவாய் - 2

வாழ்வினில் நான் தினம் வெற்றி கண்டேன் - என்
வெற்றிகள் முழுவதும் உமக்கே தரவந்தேன்
எல்லோர்க்கும் எல்லாமாய் வாழ்கின்றேன் - நான்
என்னையே உம்மிடம் அர்ப்பணிப்பேன்
கனிவாய் எனைத் தேற்றும் என் இறைவா
காணிக்கை முழுவதும் ஏற்றிடுவாய் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்