காணிக்கைப்பாடல் | 587-என்னை நான் உனக்குத் |
என்னை நான் உனக்குத் தரவந்தேன் என் தெய்வமே ஏற்றுக்கொள்வாய் (2) உன்னை நீ எனக்குத் தரவந்தாய் என் நெஞ்சிலே ஏற்றுக்கொண்டேன் (2) இதயத்தில் இரக்க உணர்வுகள் எனக்குள்ளே தெரிகிறதே உலகத்தில் மனித நேயத்தின் உணர்வுகள் மலர்கிறதே அத்தனையும் உம் பணிக்காய் அளி;க்கி;ன்றேன் ஏற்றிடுவாய் இறைவனே வறுமையில்லா வாழ்வமைக்க புறப்படுவோம் துணையாகும் தெய்வமே மனதுக்குள் பாச உணர்வுகள் தேன்துளியாய் கனிகிறதே உறவுக்குள் நேச உணர்வுகள் முதல் மொழியாய் குவிகிறதே அத்தனையும் உம் பணிக்காய் அளி;க்கி;ன்றேன் ஏற்றிடுவாய் இறைவனே அன்பதிலே உலகமைக்க அணிவகுப்போம் துணையாகும் தெய்வமே |