காணிக்கைப்பாடல் | 586-என்னைத் தந்தேன் எல்லாம் |
என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவே உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன் பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனே உம்மோடு உறவாடவே (2) புகழோடு நான் வாழவில்லை - உம் புகழொன்றே எனக்குப் போதும் அருள் வாழ்வினில் நான் வளர - உம் அன்பொன்று எனக்குப் போதும் உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் - உம் உறவொன்று எனக்குப் போதும் மகிழ்வோடும் துயரோடும் வாழும் போதும் - உம் கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக் காண - என்னை நான் பலியாக்கினேன் ஆண்டவரே உம்மை அடைய - என்னை நான் தியாகம் செய்தேன் உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட - என்னை நான் அர்ப்பணித்தேன் நற்செய்தி பணியை நாளும் செய்ய - நாதனே என்னைத் தந்தேன் |