காணிக்கைப்பாடல் | 585-என்னைத் தந்தேன் இறைவா |
என்னைத் தந்தேன் இறைவா இன்று ஏற்றிடுவாய் என் தலைவா (2) உள்ளதெல்லாம் உம்மிடமே உவப்புடனே தருகின்றேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் - 2 என்னிடம் இருப்பது எதுவுமில்லை எனக்கென்று உள்ளதும் ஒன்றுமில்லை (2) எனக்காய் அன்று உன்னைத் தந்தாய் - இன்று உமக்காய் நான் என்னைத் தந்தேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் - அன்பின் காணிக்கைப் பொருளாய் மாற்றிடுவாய் உறவுகள் உலகில் நிறைவில்லை உயர்வுகள் தாழ்வுகள் நிலைப்பதில்லை (2) உணர்வாய் இன்று உன்னைக் கண்டேன் உலகே உன்னில் பணியக் கண்டேன் ஏற்றிடுவாய் என்னை ஏற்றிடுவாய் என்னையும் தயவாய் ஏற்றிடுவாய் |