காணிக்கைப்பாடல் | 584-என்னைத் தந்திட எழுந்து |
என்னைத் தந்திட எழுந்து வருகிறேன் எல்லாம் தந்த உந்தன் அருளோடு வாழவே (2) என்னைத் தந்திட எழுந்து வருகிறேன் மாறிட மறுக்கும் என் மனதினைத் தருகிறேன் மாற்றம் வேண்டியே என்னைப் படைக்கிறேன் (2) இழந்து நான் பலியாகி ஆ... - 2 இறை உன்னைத் தந்திடவே ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு பகைமை வளர்க்கும் என் உணர்வினைத் தருகிறேன் பாசம் வளத்திட உன் உறவைக் கேட்கிறேன் (2) உறவின் கரமாகி ஆ.. - 2 உனதருளைக் கண்டிடவே ஏற்றிடு மாற்றிடு எந்தன் மனதில் நீயும் ஒளிர்ந்திடு |