Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  583-என்னை உன்னில் இணைக்க  
ஸரிபதா மகரிஸனி கபபமகரி ஸாபரிநிஸா

என்னை உன்னில் இணைக்க வந்தேன்
ஏற்றுக்கொள்வாயா
தொடரும் பயணம் பாதம் வைத்தேன்
ஏற்றுக்கொள்வாயா
இறைத் தியாக வாழ்வை நாளும் வாழ
அர்ப்பணம் என்னை தருகின்றேன்
ஏற்றுக்கொள்வாயா என் வாழ்க்கைப் பயணம் முழுவதும்
அருள் புரிவாயா என் இலட்சியப் பயணம் தொடர்ந்திட

தலைவன் என்னில் வாழும் போது
தனிமை என்னை வாட்டுமோ
தந்தை அன்பில் தழைக்கும் போது
தடைகள்தானெனை தீண்டுமோ (2)
உலக வாழ்வின் தளைகளே உந்தன்
சாயல் மறுத்து வாழ்கிறேன்
இறைச்சாயல் ஒளிர மாண்பு மிளிர
உந்தன் பாதம் படைக்கின்றேன்

உண்மை வழியில் நடக்கும் போது
உலகம் என்னைத் தூற்றுமோ
உந்தன் உறவில் முழுமை காண
உலக உறவுகள் மறுக்குமோ (2)
மனித நேயம் மடிந்தது இன்று
இறைமை மண்ணில் வீழ்ந்தது
உண்மை வழியில் நடக்க உறவில் மலர
உந்தன் பாதம் படைக்கின்றேன்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்