காணிக்கைப்பாடல் | 582-என்னை உன்னிடம் தந்தேன் |
என்னை உன்னிடம் தந்தேன் என்னை ஏற்றிடுவாய் இறைவா (2) இருப்பதெல்லாம் கொடுத்துவிட்டேன் உன்னைப் போல் மாற்றிடுவாய் நொறுங்கிய உள்ளம் தருகின்றேன் நிறைவினை காண விழைகின்றேன் (2) உன்னிடத்தில் சரணடைந்தேன் - இனி எல்லாமும் நிறைவாகும் (2) அதை உணர்ந்து கொண்டேன் இறைவா கொடுப்பதில் இன்பம் காண்கின்றேன் கோடி சுகம் அதில் பெறுகின்றேன் (2) என்னிடத்தில் என்னவுண்டு - எல்லாம் நீ தந்த கொடைதானே (2) அதை ஏற்றிடுவாய் இறைவா |