காணிக்கைப்பாடல் | 581-என்னை உமக்களித்தேன் |
என்னை உமக்களித்தேன் உந்தன் அன்பை சுவைத்தேன் என்னையே இழந்துவிட்டேன் - இயேசுவே ஏற்றிட வேண்டுகிறேன் (2) கோதுமை அப்பத்தில் திராட்சை ரசத்தில் உம்மையே எமக்களித்தாய் (2) மனிதவதாரம் உம்மையே தந்ததே - 2 என்னை நிறைவாக்கிடவே உம்மோடு வாழ்ந்திடவே உழைப்பின் வியர்வையும் விளைந்த பொருளையும் உமக்கே உவந்தளித்தேன் (2) கல்வாரிப் பலியில் உம்மையே தந்ததால் - 2 என் வாழ்வு மலர்கின்றதே உம் உறவில் கலந்திடவே |