காணிக்கைப்பாடல் | 580-என்ன என்ன ஆனந்தம் |
என்ன என்ன ஆனந்தம் 2 எல்லையில்லா ஆனந்தம் என்னை உனக்கு கொடுப்பதில் தானே ஆனந்தம் உன்னில் உனக்காய் வாழ்வது எந்தன் ஆனந்தம் கனிகளை ஏந்தி உம் பீடம் நான் வந்தேன் கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர் மலர்களை ஏந்தி உம் பீடம் நான் வந்தேன் எனக்காய் மலரவேண்டும் என்று நீர் கேட்டீர் உன்னில் என்னைத் தந்துவிட்டேன் உம் பணிசெய்யத் துணிந்து விட்டேன் - 2 என்னை ஏற்று மகிழ்வாயா என்றும் உன்னில் வாழ்ந்;திடுவேன் - 2 கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன் எனக்காய் வாழவேண்டும் என்று நீர் கேட்டீர் தீபம் ஏந்தி உம் பீடம் நான் வந்தேன் எனக்காய் ஒளிர வேண்டும் என்று நீர் கேட்டீர் உன்னில் வாழ முடிவெடுத்தேன் உம் பணிசெய்யத் துணிந்து விட்டேன் - 2 என்னை ஏற்று மகிழ்வாயா என்றும் உன்னில் வாழ்ந்;திடுவேன் - 2 |