Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  579-என் வாழ்வின் பரம்பொருளே  

என் வாழ்வின் பரம்பொருளே
எனை ஆழும் இறையருளே
எனை முழுவதும் தருகின்றேன் இறைவா
என் மனம் ஏற்றிடுவாய் தலைவா

கண்கள் சிந்தும் கண்ணீரை
கரம் கொண்டு துடைத்திடவே - என்
கரங்களை உன்னிடம் தருகின்றேன்
ஏற்றிடுவாய் இறைவா
வழி ஏதும் தெரியாமல்
அலைந்திடும் மனிதருக்கு - உடன்
நடந்திட கால்களைத் தருகின்றேன்
ஏற்றிடுவாய் இறைவா
உனை உடைத்து சிலுவையிலே
எனக்காய் தந்தது போல்
எனை உடைத்து பிறர்க்காய் தந்திட
மனம் தருவாய் இறைவா

மன்னிக்க முடியாமல்
மறுத்திட்ட இதயத்தையே - பிறர்
தவற்றினை மறந்து வாழ்ந்திடவே
ஏற்றிடுவாய் இறைவா
குறைகளைத் தேடுகின்ற
என் இரு விழிகளையே பிறர்
நிறைகளை நிறைவாய் கண்டிடவே
ஏற்றிடுவாய் இறைவா
இறை நிலையை மறந்து விட்டு - நீ
எனக்காய் பிறந்ததுபோல் - என்
உயர் நிலை மறுத்து
பிறருடன் வாழ்ந்திட எனைநீ ஏற்றிடுவாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்