காணிக்கைப்பாடல் | 576-என் அன்பு யேசுவே |
என் அன்பு யேசுவே எல்லோரும் வாழவே என்னையே தருகின்றேன் ஏழை என்னையும் எளிய என் வாழ்வையும் (2) தயவாய் ஏற்றிடுமே இறைவா என்னை ஏற்றிடுவாய் உன்னில் மாற்றிடுவாய் (2) கண்களைத் தர நினைத்தேன் - அது கலங்கிடும் நிலை கண்டேன் கைகளைத் தர நினைத்தேன் - கறை படிந்தது என உணர்ந்தேன் அப்படியே கொடுக்கின்றேன் - என்னை அணைத்துக் கொள்ளும் ஆண்டவரே (2) இறைவா என்னை ஏற்றிடுவாய் உள்ளத்தைத் தர நினைத்தேன் - அது உடைந்திடும் நிலை கண்டேன் என்னையே தர நினைத்தேன் - நான் தகுதியில்லை உணர்ந்தேன் தவம் இருந்து கொடுக்கின்றேன் - என்னைத் தள்ளி விடாமல் ஏற்றருளும் (2) இறைவா என்னை ஏற்றிடுவாய்.. |