காணிக்கைப்பாடல் | 574-எல்லையில்லாத அன்பாலே |
எல்லையில்லாத அன்பாலே - உம் ஏக மகனை எமக்களித்த பிதாவே ஏற்றருள்வீர் எம் பலிப்பொருளிதனை கல்மனம் வெயில்முன் பனிமலை போலே - 2 கசிந்துருகிடுமே உம் நினைவாலே புலன்களை அடக்கி மனதினை ஒடுக்கி புரிந்திடும் ஒறுத்தல் முயற்சிகள் அனைத்தும் - 2 நலன்களின் சுனையே உமக்களிக்கின்றோம் - 2 நலிந்திடும் எளியோர் அருள் பெறச் செய்வீர் உடலினை ஒறுத்துப் புன்செயல் அகற்றி உள்ளத்தை எப்போதும் மேலே உயர்த்தி - 2 இடர்களைப் பொறுத்து உம் சுதனோடு இனிதுமைப் புகழும் வரமருள்வீரே |