Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  571-எமை முழுதும் உமக்களிக்க  

எமை முழுதும் உமக்களிக்க
எமக்கிருக்கும் ஆசைதனை
எடுத்துரைக்கக் கூடி வந்தோம்
ஏற்றருள்வீர் ஆண்டவரே - 2

யேசுவுடன் உமை வணங்க
நேசமுடன் நன்றி சொல்ல
ஆசையுடன் மன்றாட
தோஷமெல்லாம் தீர்த்திடவே - 2

கல்வாரி மலைமேலே
பலியான யேசுவையே
பலியாகத் தர வந்தோம்
ஏற்றருள்வீர் ஆண்டவரே - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்