காணிக்கைப்பாடல் | 569-எதை நான் தருவேன் |
எதை நான் தருவேன் இறைவா - உம் இதயத்தின் அன்பிற்கீடாக எதை நான் தருவேன் இறைவா குறை நான் செய்தேன் இறைவா - பாவக் குழியில் விழுந்தேன் இறைவா - 2 கறையாம் பாவத்தைப் நீக்கிடவே - 2 நீர் கல்வாரி மலையில் இறந்தாயோ பாவம் என்றொரு விசத்தால் - நான் பாதகம் செய்தேன் இறைவா - 2 தேவனே உம் திருப்பாடுகளால் - 2 எனைத் தேற்றிடவோ நீh இறந்தாயோ கணக்கின்றித் தவறுகள் செய்து - இன்று கண்ணீர் வடிக்கின்றேன் இறைவா பிணக்கின்றி உம்முடன் நான் வாழ 2 நீர் பிறரன்பைக் காட்டிட இறந்தாயோ அகிலமே அறிவால் அளந்தேன் - உன் அன்பையும் அளந்து மறந்தேன் மகிமை நிறைந்த என் இறைவா நீர் மனிதன் எனக்காய் இறந்தாயோ |