காணிக்கைப்பாடல் | 568-எதைத்தருவேன் இறைவா |
எதைத்தருவேன் இறைவா நான் எனைத் தருவேன் தலைவா எல்லையில்லா உமது அன்பை எண்ணி வியந்து புகழ்ந்து பாடி கண்ணில் தோன்றும் யாவுமே உந்தன் படைப்பின் மகிமையே எந்தன் உடமை என்று நான் ஏந்தி வர ஏதுமில்லை அப்பரசக் காணிக்கையை கொண்டு வந்தேன் உம் திருமுன் ஏற்றிடுவீர் மாற்றிடுவீர் யேசு உடலும் ரத்தமுமாய் எல்லாம் உமது கொடைகளே எல்லோருக்கும் சொந்தமே இல்லாருக்கும் ஈட்டினால் உறவைத் தந்த வான்மழையே வேதனையும் சோதனையும் இன்ப துன்பமத்தனையும் நான் படைப்பேன் உம்திருமுன் ஏற்றிடுவீர் என் இறைவா |