Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  566-எதுவேண்டும் உனக்கு  


எதுவேண்டும் உனக்கு இறைவா - 2
எது தந்தபோதும் உனக்கது ஈடாகுமா - 2
எதுவேண்டும் எதுவேண்டும் - 2

மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் - 2 - அது
ஏற்றதாய் இருக்குமோ இறைவா

ஆ ஆ ஆ ஆ ஆ
பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன் - 2 - அது
சிறப்பாய் இருக்குமோ இறைவா

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்