Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  566-எடுத்து வருகிறேன்  



எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
ஏற்றிடு என் இறைவா - உம்
திருப்பலிப்பீடம் அர்ச்சனை மலராய்
மலர்ந்திட அருள் புரிவாய் (2)

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன்
ஏற்றிடு என் இறைவா (2)
உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் - நிதம்
தருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
தருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் - 2

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட
ஏற்றிடு என் இறைவா (2)
துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடை புரிய
வருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் - 2

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட
ஏற்றிடு என் இறைவா (2)
தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலைக் கண்டிட
வருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்