காணிக்கைப்பாடல் | 564-உனக்கென நான் தரும் |
உனக்கென நான் தரும் காணிக்கையை உவப்புடன் ஏற்பாய் என் இறைவா (2) பலியென எனை நான் தருகின்றேன் - 2 உன் பத மலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2 உழைப்பின் கனி இது உனக்காக உன்னருள் கொடைகளின் பலனாக (2) படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 உன் படைப்பினில் சிறந்ததைத் தருகின்றேன் - 2 உடல் பொருள் ஆவி உனக்காக உன் பணி புரிதலின் நிறைவாக (2) மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 நான் மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2 |