காணிக்கைப்பாடல் | 563-உன்னிலே என்னை கரைத்து |
உன்னிலே என்னை கரைத்து வாழ்வின் சுவையைத் தரவந்தேன் வாழ்விக்கும் வல்லதேவா எற்றுக்கொள்ளுமே (2) என்னிலே உம்மைக் கண்டு உம்மைப் போல வாழ்ந்திட உம் திருப்பீடம் வந்தேன் ஏற்றுக்கொள்ளுமே (2) இதயத்தில் உந்தன் ஈரம் விழியினில் உந்தன் பாசம் அவனியில் காட்டிட வந்தேன் காற்றினில் உந்தன் வேதம் ஆனந்த கானமாக்கி மாந்தர்க்கு இசைத்திட வந்தேன் நானென்றும் வாழத்தானே தன்னையே தந்த தேவா (2) உன்னையே வாழ வந்தேன் ஏற்றுக்கொள்ளுமே எண்ணத்தில் உன்னைத்தாங்கி உன்பணி கரத்திலேந்தி வாழ்வெல்லாம் உழைத்திட வந்தேன் புன்னகை முகத்திலேந்தி பூமழை உலகில் தூவி உன்னன்பை பொழிந்திட வந்தேன் என்னையே நினைத்து நாளும் தன்னையே தந்த தேவா (2) உன்னையே நினைத்து வாழ என்னைத் தருகின்றேன் |