Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  562-உன்னிடத்தில் என்ன இல்லை  

உன்னிடத்தில் என்ன இல்லை
என்னிடத்தில் ஒன்றும் இல்லை (2)
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொத்துமில்லை
பாவம் செய்தேன் இரத்தத்தில் சுத்தமில்லை

கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை (2)
இறைவா உன் பாதத்தில்
உள்ளத்தை நான் வைக்க
உள்ளத்தில் ஞானமில்லை

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு
நிம்மதியைத் தந்துவிடு
நேசித்து வந்த என் நெஞ்சத்தைச் சுத்தம்செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னைக் காணிக்கை பெற்றுக்கொள்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்